நடிகர் சமுத்திரக்கனியின் ரீல் குடும்பம் | ஆண் தேவதை |சமுத்திரக்கனியின் அடுத்த சமூகம் சார்ந்த படைப்பு |TAMIL Newstelevision

ஆண் தேவதை :

நடிகர் சமுத்திரக்கனியின் படங்களில் கண்டிப்பாக சமூகத்திற்கு தேவையான ஏதாவது ஒரு கருத்து இருக்கும். வெரும் பணம் சம்பாதித்தால் போதும் என மசாலா படங்கள் எடுக்கும் பல டைரக்னர்களுக்கு மத்தியில், இந்த சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் சமூத்திரக்கணியின் படங்கள் இருக்கும். அவர் இயக்கிய சாட்டை படத்தில் ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தத்ரூபமாக நடித்து காண்பித்திருப்பார். நாடோடி படத்தில் நண்பர்களின் முக்கியதுவத்தை எடுத்து சொல்லியிருப்பார். அப்பா படத்தில் ஒரு குழந்தையை இந்த சமூகத்தில் எப்படி வளர்க்க வேண்டும் என்தை பல அப்பாக்களுக்கு புரிய வைத்தார். அந்த படத்தை பார்த்த பலரும், “இனி எனது குழந்தையை அவன் விருப்பப்படியே நல்ல முறையில் வளர்ப்பேன்” என கூறினார்கள். இப்படி பல சமூகம் சார்ந்த படங்களை இயக்கிய நடிகர் சமுத்திரக்கனியின் அடுத்த படைப்பு தான் இந்த ஆண் தேவதை.

படத்தில் என்ன ஸ்பெஷல்?

இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனி ஒரு சேல்ஸ்மேனாக நடிக்கிறார். குளிப்பது, படுப்பது தவிர்த்து மற்ற 24 மனி நேரமும் உழைக்கும் நபர். அவரது மனைவியாக நடிப்பவர் Night shift ல் வேலை பார்க்கும் ஒரு ஐடி தொழிலாளியாக நடிக்கிறார். படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால்

“இப்படி 24 மணி நேரமும் உழைத்தால், நாம் வாழ்வதற்காக உழைக்கின்றோமா? உழைப்பதற்காக வாழ்கிறோமா?

என்ற கேள்வியை மக்கள் இடத்தில் வைக்கின்றனர். இப்படி பிறருக்காக உழைத்து கொண்டே இருந்தால் நாம் எப்பொழுது நம் வாழ்க்கையை வாழ ஆரமிப்பது? என்பது தான் அந்த கேள்வி. அதே சமயம் அவரது மனைவி ஜடி துரையில் மற்ற தவறான பெண்களுக்கு மத்தியில் உண்மையாக உழைத்து குடும்பத்தை சமாளிக்கிறார்.

அதனால் வேலை வெறுக்கும் சமுத்திரக்கனி தனது வேலையை ராஜினாமா செய்து சொந்தமாக தொழில் செய்து வாழ விரும்புகிறார். அதே சமயத்தில் குழந்தையை வளர்ப்பதற்கும், மனைவி மற்றும் குடும்ப செலவையும் எப்படி ஓரு ஆணாக அவர் சமாளிக்கிறார் என்பதை அழகாக காட்டியிருக்கின்றனர். சாதரண middle Class ல் வாழும் இவர்களுக்கு வாழ்க்கை எப்படி எல்லாம மாறுகிறது என்பது தான் இந்த படத்தின் மீதி திரைக்கதை. பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும் சமுத்திரக்கனி இந்த படத்தில் பேசியுள்ளார். Good touch, Bad touch மற்றும் பெரியவர்கள் குழந்தைகளை தவறான நோக்கத்தில் தொட்டால், குழந்தைகள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த படத்தின் மூலம் சமுத்திரக்கனி எடுத்து சொல்லியிருக்கிறார். மேலும் இந்த படத்தை பற்றி அறிய இந்த படத்தின் ட்ரெய்லரை இணைத்துள்ளோம். பார்த்து விட்டு கருத்துகளை சொல்லுங்கள். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *