இப்படி ஒரு சட்டத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? | பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு இது உதவியாக இருக்கும் |law students about unknown laws |Tamil Newstelevision

சட்ட கல்லூரி மாணவியின் புது முயற்சி :

தமிழ் நாட்டில் வாழும் 99% சதவீத மக்களுக்கு தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் சட்டத்தை பற்றி பெரிதாக தெரிவதில்லை. நமக்கே தெரியாமல் பல பயனுள்ள சட்டங்கள் நமது நாட்டில் இருக்கின்றது. அதை வெளிகொண்டு வரும் முயற்சியில் தமிழ்நாட்டை சார்ந்த ஒரு சட்டக்கல்லூரி மாணவி இறங்கியுள்ளார். அதில் நமக்கு தினசரி வாழ்க்கையில் பயனுள்ள சில சட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் அந்த முயற்சி. இதன் மூலம் தமிழகத்தில் இருக்கும் அனைவருக்கும் அடிப்படை சட்டம் கொண்டு சேர்க்க முடியும். அதனால் யாரும் யாரையும் இனிமேல் ஏமாற்றி பணம் சம்பாதிக்க முடியாது.

பொதுவாக பெண்கள் வெளியே செல்லும் போது அவர்களுக்கு சிறுநீர் கழிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். அதனால் ஏதாவது அருகில் இருக்கும் ஒரு உணவகத்தில் சென்று சிறுநீர் கழித்து விடலாம் என சிலர் நினைப்பர். ஆனால் சில ஹோட்டல் முதலாளிகள், உணவு உண்ணாமல் யாரும் சிறுநீர் கழிக்க கூடாது என்று வருபவர்களை விரட்டி விடுவர். ஆனால் நம் இந்திய அரசின் அடிப்படை சட்டம் என்ன சொல்கிறது என்றால், தொழில் செய்யும் எந்த ஒரு ஹோட்டல் நிர்வாகமும், மக்கள் அவசரத்திற்கு சிறுநீர் கழிக்க எந்த விதமான காசும் வசூலிக்க கூடாது என்கிறது. அப்படி தடையை மீறி இந்த அடிப்படை விஷயத்திற்கு கூட பணம் வாங்கினால் அவர்கள் மீது அரசு மற்றும் சுகாதாரத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் சொல்கிறது அந்த சட்டம்.

அதுமட்டுமின்றி வெளியே செல்லும் நபர் தாகமாக இருந்தால் தண்ணீர் இன்றி தவிக்கும் போது, ஏதாவது ஒரு ஹோட்டலில் வைத்திருக்கும் குடிநீரை இலவசமாக உபயோகித்து கொள்ளலாம். அடிப்படை தேவையான விஷயங்களில் தண்ணீரும் அடங்கும். அதனால் அதை வைத்து அவரச தேவையின் போது காசு வசூலிக்க கூடாது என்கின்றனர். இப்படி மக்களக்கு தேவையான அடிப்படை சட்டத்தை தினமும் மக்களுக்கு எடுத்துச் செல்ல போவதாக அந்த பெண்மணி தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களை எது எதுக்கோ பயன்படுத்தும் இந்த இளைஞர்களுக்கு மத்தியில், அதை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று இந்த பெண் நினைத்தது மிகவும் பாராட்டுக்குறியதாகும்.அந்த பெண் பேசிய காணொளியை கீழே இணைத்துள்ளோம். இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *